உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

புதுடில்லி துவாரகா 7-வது செக்டாரில் உள்ள ஸ்ரீராம் மந்திரில் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காலையில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் அம்ருத கணபதிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 22-வது ஆண்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் விழா தொடங்கியது. ரெங்கநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சபா, பாலம் மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சபா, ஹஸ்தல் அன்பர்கள் இதில் பங்கேற்று, 12 முறை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், விஷ்ணு சஹஸ்ரநாம ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமங்கள் நடைபெற்றன. பூரணாஹூதியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !