இன்றைய போட்டோ
திருப்பூர், மாநகராட்சி அறிவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு விழாவில் வெற்றி அமைப்பு தலைவர் சிவராம் பேசினார். (வலமிருந்து) மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், கலெக்டர்கள் கிராந்திகுமார், கிரிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், ஊராட்சி தலைவர் கணேசன், சிறுதுளி அமைப்பு நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ராயல் கிளாசிக் நிறுவன தலைவர் கோபாலகிருஷ்ணன்.
28-01-2024 | 17:19
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரியில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு மூலம் கீழ்நிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
07-11-2025 | 18:17
திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 21 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அளவிலான போராட்டம் நடந்தது.
07-11-2025 | 16:41
சென்னை மாவட்ட நூலகத்தில் உள்ள மரம் விழுந்து சுவர் சேதமடைந்து உள்ளது.இடம்: அசோக்நகர்
07-11-2025 | 16:40
பதவி உயர்வு கோரி பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
07-11-2025 | 16:00
வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது வரும் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் வந்தே மாதரம் பாடலை பாடினர்.
07-11-2025 | 15:59
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட ஹாக்கி அகாடமியின் நூறாவது ஆண்டு விழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
07-11-2025 | 15:59
கடைசியில என்னையும் தட்ட தூக்க வச்சிட்டீங்க...திருப்பூர் நகருக்குள் போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால், ஆடுகள் குப்பையில் கிடந்த பாக்கு மட்டை தட்டை எடுத்து செல்கின்றன. இடம்: மங்கலம், ரோடு.
07-11-2025 | 15:59