இன்றைய போட்டோ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான நான்கு நீதிமன்றம் திறப்பு விழாவில் கல்வெட்டை திறந்து வைத்த உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார். (இடமிருந்து) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜசேகர், சரவணன், சுரேஷ்குமார்,ஜெகதீஷ் சந்திரா, புகழேந்தி, ராமகிருஷ்ணன், அருள் முருகன்.
26-07-2024 | 19:49
மேலும் இன்றைய போட்டோ
சிதம்பரம் தில்லை கோவிந்த ராஜ பெருமாள் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மூலவர் சன்னிதி கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்ற பக்தர்கள் கோவிந்தா நாமம் முழங்கினர்.
04-11-2025 | 08:45
திருவள்ளூர் மாவட்டம், கொப்பூர் ஊராட்சியில் உள்ள கிளை நூலகம், மதுக்கூடமாக மாறியது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிளை நூலகம் சீரமைக்கப்பட்டு உள்ளது.
04-11-2025 | 08:40
உலக கல்விக்கழகங்கள் கூட்டமைப்பின் 8ம் ஆண்டு மாநாடு டில்லியில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, வேலூர் விஐடி பல்கலை வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, 'வாழ் நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவித்தார்.
04-11-2025 | 08:34
அலையன்ஸ் பிரான்சைஸ் ஆப் மெட்ராஸ் வளாகத்தில் திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணியின் ஓவிய கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு ரசிக்கலாம். இடம்: நுங்கம்பாக்கம்.
04-11-2025 | 07:53
டில்லி முத்தமிழ் பேரவை நடத்திய பக்தி இசை நிகழ்ச்சியில், சுதா ரகுராமன் கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினார்.
04-11-2025 | 07:49
அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சார்பில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்ட அப்பல்லோ ஆயுர்வேத மருத்துவமனையை அக்குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி திறந்து வைத்தார்.
04-11-2025 | 07:46