இன்றைய போட்டோ
மதுரை கீழ ஆவணி மூல வீதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அப்பகுதியை பேரிக்கார்டுகள் அமைத்து வாகனங்களை ஒழுங்கு படுத்தினர். இனி பேரிகார்டுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
27-08-2024 | 16:44
மேலும் இன்றைய போட்டோ
அவிநாசி அடுத்த சுண்டக்காம்பாளையத்தில் குளம் நிரம்பும் தருவாயில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, குளத்தை வழிபாடு செய்வதற்காக, மாயவர் பெருமாளை ஊர்வலமாக எடுத்து சென்ற பொதுமக்கள்.
17-10-2026 | 20:46
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து வழித்தடமான சோஜிலா கணவாய் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில்,பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.இந்நிலையில்,போக்குவரத்தைச் சீரமைப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்
17-10-2026 | 20:24
கூழமந்தல் கிராமத்தில் உள்ள பேசும் பெருமாள் கோவிலில், ஐந்தாவது சனிகிழமையான நேற்று, உத்சவருருக்கு ராமர் பட்டாபிஷேக அலங்காரம் நடந்தது.
17-10-2026 | 19:55
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை பாரிஸ் பூக்கடை பகுதியில் வாழை இலைகள், பழங்கள் மற்றும் இதர பூஜைப் பொருட்களை வாங்குவதற்காகக் குவிந்திருந்த மக்கள் கூட்டம்.
17-10-2026 | 19:36
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நேற்று நடந்தது இதில் பங்கேற்ற திமுக எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர்.இடம் : தேனாம்பேட்டை
17-10-2026 | 19:36
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வறண்டதை பயன்படுத்தி மீனாட்சி கோயில் நிர்வாகம் சார்பில் துார்வாரும் பணி நடக்கிறது.
17-10-2026 | 19:14
அ.தி.மு.க.,வின் 56ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், இளைஞர் சஞ்சய் செந்தில்நாதன் எழுதிய ‘தி திராவிட பீனிக்ஸ்’ புத்தகத்தை பொதுச் செயலாளர் பழனிச்சாமி வெளியிட்டார் உடன் கட்சி நிர்வாகிகள்.
17-10-2026 | 18:24