இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பீரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் வருடாந்திர பூஜைக்கு வந்த பக்தர்கள், அங்குள்ள மலையின் மீது அமர்ந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
20-01-2026 | 06:58
இரு குளங்களை இணைத்தாலும், பெயர்கள் என்னவோ வேறு வேறு தான். இடம்: முத்தண்ணன் மற்றும் செல்வம்பதி குளங்கள்.
20-01-2026 | 06:54
செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில், ஒரு மாதமாக நடைபெற்று வந்த இந்திய நாட்டிய விழா,நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில், நாட்டுப்புற கலைஞர்களுடன், சர்வதேச பயணியர் கரகாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
20-01-2026 | 06:47
ஓடைமா நகர் குப்பம் பகுதி மீனவரின் வலையில், பல ஆண்டுகளுக்கு பின் 1 டன் அளவிலான 150 பாறை மீன்கள் கொத்தாக சிக்கின. அவை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இடம்: பெசன்ட் நகர், சென்னை.
20-01-2026 | 06:43
தென் அமெரிக்க நாடான சிலியின் கான்செப்சியன் நகரையொட்டி காட்டுப்பகுதிகளில், மிகக் கடுமையான காட்டுத்தீ பரவி வருகிறது. வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாகப் பரவி, பெரும் வனப்பகுதியை சாம்பலாக்கி வருகிறது.
20-01-2026 | 06:39
நாடு முழுதும் வரும் 26 ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.
19-01-2026 | 23:27
திருநெல்வேலி மாவட்டத்தில் கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் பக்கம் அமைந்துள்ள கழுவூர் கிராமத்து நீர்நிலைகளுக்கு ஆஸ்திரேலியா, நைஜீரியா,மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வந்த கூழைக்கடா உள்ளீட்ட பறவைகளின் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் திறனை பெற்றுவிட்ட நிலையில், தங்கள் தாயகம் திரும்ப தயாராகி வருகிறது.
19-01-2026 | 23:10