இன்றைய போட்டோ
செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கும் பிரதான எல்லைப் பகுதியாக, ஓங்கூர் ஆறு உள்ளது. சித்தாமூர், விளாம்பட்டு அருகே, ஓங்கூர் ஆற்றின் கரைகள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளதால், மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தாழ்வான கிராமங்களில் வெள்ள நீர் சூழும் அபாயம் நிலவுகிறது.
14-07-2025 | 01:17
மேலும் இன்றைய போட்டோ
'சென்னையில் சங்கீத உற்சவம்' நிகழ்ச்சியில் பிரபல வயலின் வித்வான் மைசூர் டாக்டர் மஞ்சுநாத், புல்லாங்குழல் இசைக் கலைஞர் பாம்பே ரோணு மஜூம்தார் ஆகியோரின் ஜுகல்பந்தி நடந்தது.
17-01-2026 | 07:46
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கலை பண்பாட்டு துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது
16-01-2026 | 22:48
மாட்டுப் பொங்கலையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாடுகள் வழிபாட்டிற்காக கோவை தடாகம் ரோடு மாதேஸ்வரன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன.
16-01-2026 | 22:48
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
16-01-2026 | 22:47
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கலை யொட்டி பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உணவு அளித்த பொதுமக்கள்.
16-01-2026 | 17:05