உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஆர்.வி.ரோடு பொம்மசந்திரா இடையிலான மெட்ரோ ரயில் சேவையை நேற்று துவக்கி வைத்து, அதில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார். அருகில், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், கவர்னர் தாவர்சந்த் கெலாட்.

11-08-2025 | 09:43


மேலும் இன்றைய போட்டோ

மோந்தா புயல் எதிரொலியாக, சென்னை மெரினா சீனிவாசபுரம் கடற்கரையில் வரிசையாக நிற்கும் மீன்பிடி படகுகள்.

28-10-2025 | 10:43


சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.

28-10-2025 | 07:34


கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சுப்பிரமணியசுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.

28-10-2025 | 07:17


கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேட்ரிக் ஹெர்மினியை, அவரது இல்லத்தில் நம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

28-10-2025 | 06:45


மோந்தா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்து உள்ளனர். ஆழ்கடல் மீன் பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

28-10-2025 | 06:35


கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

28-10-2025 | 06:28


கோவை வி. கே.கே. , மேனன் ரோட்டில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொது கூட்டத்தில், கட்சியின் தலைவர் அன்புமணி பேசினார்.

27-10-2025 | 22:15


திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.

27-10-2025 | 22:14


கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது

27-10-2025 | 22:11