உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வயல்வெளியில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வழியாக செல்லும் பயணியர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பூக்களை ரசிப்பதுடன், அவற்றுக்கு நடுவே நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர். பூந்தோட்ட உரிமையாளர் இதற்கு ஒரு குழுவிற்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கின்றனர். பூக்களை விற்றால் தான் காசு என்பது இல்லை. பூத்து நின்றாலும் காசு தான் போலும்.

22-08-2025 | 06:27


மேலும் இன்றைய போட்டோ

மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். உடன், வேட்பாளர். இடம்:மதுராந்தகம்.

03-10-2026 | 21:56


அசாம் மாநிலம் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.

03-10-2026 | 21:56


உத்திரமேரூர் பஜனை கோவிலில், கருடசேவை விழாவில், நேற்று கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த பெருமாள்.

03-10-2026 | 20:26


விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,செயலாளர் டாக்டர் லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் டி.கே.பி.ரமேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

03-10-2026 | 19:34


தேனியில் உள்ள பி.சி., கான்வென்ட் பள்ளி வகுப்பறையில் நகராட்சி ஊழியர் கொசு ஒழிப்பு மருந்து அடித்தார்.

03-10-2026 | 19:27


குவாரி பற்றிய செய்திக்கான படம்

03-10-2026 | 19:26


ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

03-10-2026 | 18:56


மரக்காணம் ஒன்றிய துணைச் சேர்மன் பழனி வாழ்த்து தெரிவித்தார்.

03-10-2026 | 18:52


தினமலர் நாளிதழ், அன்னபூர்ணா மசாலா மற்றும் பி-ரைட் ஆயில் சார்பில், சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

03-10-2026 | 18:52