இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நோயாளிகளுக்கு விறகு அடுப்பில் சமையல் செய்யும் பணி நடந்து வருகிறது.
24-03-2026 | 15:22
சட்டசபை தேர்தலை முன்னிட்டு வந்துள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இடம்: உடுமலை அரசு கலைக் கல்லூரி.
24-03-2026 | 15:22
ஈரான் ஏவிய ஏவுகணை ஒன்றை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது. இதன் பெரிய சிதறல் மேற்கு கரையின் பெடுயல் குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் விழுந்து கிடந்தது. அதை ஆச்சரியமுடன் பார்த்த குழந்தைகள்.
24-03-2026 | 08:18
பதவி இருந்தால் தான் செயல்பட முடியும்!- சரத்குமார். உங்களது கருத்தை படத்தை பார்த்து கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
24-03-2026 | 08:11
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களின் நேர்காணல் முடிவடைந்த நிலையில், தொகுதிகள் ஓட்டு சேகரிக்க தலையில் உதயசூரியன் தொப்பி அணிந்து புறப்பட்ட திமுக தொண்டர் வடிவேல்.
24-03-2026 | 08:07
பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் 2ம் நாளில், ஏலவார்குழலியுடன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சூரிய பிரபையில் உலா வந்தார்.
24-03-2026 | 07:57