இன்றைய போட்டோ
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் புதியதாக துவங்கப்பட்ட பைராபி-சாய்ராங் ரயில் பாதை, பசுமை போர்த்திய வயல்களின் நடுவே வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகளின் மேல் அமைந்துள்ளது. இந்த தடத்தில் ரயிலில் பயணிப்பது புதிய அனுபவத்தை தரும். இது மொத்தம் 8,070 கோடி ரூபாய் மதிப்பில் 51.38 கி.மீ., தூரத்துக்கு கட்டப்பட்டுள்ளது.
14-09-2025 | 08:04
மேலும் இன்றைய போட்டோ
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து எஸ் பி திவ்யா பேசினார்.
29-09-2026 | 15:52
தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும் உடுமலை ஒட்டுக்குளத்தில் குதிரைக்கு பயிற்சி கொடுக்கின்றனர்.
29-09-2026 | 15:51
விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த மினி பஸ் உரிமையாளர்கள் மனு கொடுக்க வந்தனர்.
29-09-2026 | 15:51
செய்தி.விஜயராகவன் படம். யுவராஜ் புதிதாக கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மீனவர் குப்பம் மீனவர்கள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29-09-2026 | 15:51
உலக இதய தினத்தை முன்னிட்டு தினமலர் நாளிதழ் மற்றும் கே.ஜி., மருத்துவமனை இணைந்து கோவை ரயில் நிலையத்தில் பயணிகளிடையே லோடிங் டோஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது
29-09-2026 | 15:50
புதிதாக கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மீனவர் குப்பம் மீனவர்கள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
29-09-2026 | 15:50