இன்றைய போட்டோ
அரும்பாடுபட்டு உழைத்ததன் விளைவாக விளைந்த நெல் மூட்டைகள் தானியக்கிடங்கின்றி மழையில் நனைவது கண்டு பொறுக்க முடியாமல், அதை தார்ப்பாய் வைத்து மூடி காப்பாற்ற துடிக்கும் விவசாயி. வானாளாவிய அதிகாரங்கள் கொண்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், விளைப்பொருட்களை காப்பாற்ற போராடும் விவசாயிகளின் கண்ணீரை எப்போது துடைப்பர்? இடம்: பட்டியாலா, பஞ்சாப்.
08-10-2025 | 08:04
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு பாசனம், குடிநீருக்கு அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆற்றில் செடிகளுக்கு நடுவே பாய்ந்து செல்கிறது. இடம்: மடத்துக்குளம், உடுமலை.
08-10-2025 | 08:03
காசியில் ஓடும் கங்கை நதியின் பல்வேறு படித்துறைகளில் அஸ்ஸி காட் எனப்படும் புனிதமான படித்துறையும் ஒன்று. கடந்த மாதம் கங்கையில் பொங்கி வந்த வெள்ளம் அஸ்ஸி காட் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளையும் மண் குவியலாக்கிவிட்டது. வரவிருக்கும் திருவிழாவினை முன்னிட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
08-10-2025 | 07:51
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின், துபாயில் ட்ரோன்கள் மற்றும் சிறிய விமானங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. இதில் இடம் பெற்ற சீனாவின் 'யிவ்டோல் எஸ்சீரோ' என்ற ஒரு நபர் மட்டும் பயணம் செய்யும் சிறிய விமானத்தை பார்வையிடும் பார்வையாளர்கள்.
08-10-2025 | 07:14
ஏரிகள் பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக திருநீர்மலை பெரிய ஏரியின் கரைகளை தூய்மை செய்து , அகலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : திருநீர்மலை
07-10-2025 | 19:46
திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தின் கரை, சென்ற பருவ மழையின் போது சேதம் அடைந்தது .தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது
07-10-2025 | 19:33
சில தினங்களாக பெய்த மழையால் விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் நிலத்தை உழுது போடும் பணி நடந்து வருகிறது.
07-10-2025 | 19:19
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை அம்பேத்கார் நகர் பகுதியில் ,ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் இருந்து நான்கு குடும்பங்கள் பூ எடுத்துச் செல்ல ஏதுவாக மூங்கில் கூடை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
07-10-2025 | 18:55