உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகை முன்னிட்டுசொந்த ஊர் செல்வதற்காக சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.

17-10-2025 | 19:56


மேலும் இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திரண்டவர்களால் நிரம்பி வழிந்த சென்னை தாம்பரம் ரயில் நிலையம்.

18-10-2025 | 09:01


இந்தியா-பாக் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் ராணுவத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அவர்களின் குடும்பங்கள் தூரத்தில் இருந்த போதும் சக வீரர்களையே குடும்பமாக்கி மகிழ்ந்தனர்.

18-10-2025 | 08:55


தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி பூங்கா வாண வேடிக்கையால் ஜொலித்தது.

18-10-2025 | 08:51


இது எந்த ஊர் திருவிழா, இவ்வளவு கூட்டம் என்று எண்ண வேண்டாம். தீபாவளிக்கு மட்டன் சாப்பிட விரும்புபவர்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை விற்கவும், வாங்கவும் கூடிய கூட்டம் தான் இது. இடம்: திருமங்கலம், மதுரை மாவட்டம்.

18-10-2025 | 08:48


தீபாவளியை முன்னிட்டு கோவை சிங்கநல்லூர் பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காக முன்டி அடித்து ஓடும் வெளியூர் செல்லும் பயணிகள்,

18-10-2025 | 08:29


தூத்துக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

17-10-2025 | 20:00


இங்கே ஏதோ தண்ணீர் பைப் உடைந்து விட்டது என நினைக்க வேண்டாம் ... கோவை ஆவாரம்பாளையம் ரோட்டிலுள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் செய்த தீ தடுப்பு ஒத்திகை தான் இது.

17-10-2025 | 19:59


திருவள்ளூர் அடுத்த பூண்டி நீதேக்கத்தில் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்ட தண்ணீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக சீறிப்பாய்ந்து கடலுக்குச் செல்கிறது

17-10-2025 | 19:59


திருநெல்வேலி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17-10-2025 | 19:59