உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டியில் உள்ள கர்நாடகா தோட்டக்கலைத்துறை பூங்கா பசுமையாக காணப்படுவதால், இங்கு திரளான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

21-11-2025 | 07:51


மேலும் இன்றைய போட்டோ

கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்.

21-11-2025 | 07:21


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தமிழக அரசின் பூம்புகார் விற்பனையகத்தில், பாரம்பரிய பித்தளை உள்ளிட்ட விளக்குகளின் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கியது. டிசம்பர் 6ம் தேதி வரை நடக்கும், இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். இடம்: அண்ணாமலை

21-11-2025 | 07:17


பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள அவரின் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் 11வது உலக ஆன்மிக மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, முன்னதாக சத்ய சாய்பாபாவின் மஹா சமாதியில் மரியாதை செலுத்தினார்.

21-11-2025 | 07:09


ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் உள்ள கிரெவின் அருட்காட்சியகம் மெழுகு சிலைகளுக்கு புகழ்பெற்றது. இங்கு பிரபலமான நபர்களின் மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் முழு உருவ மெழுகு சிலை பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

21-11-2025 | 07:01


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

21-11-2025 | 07:00


56வது அகில இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்று துவங்கியது, துவக்க விழாவில் பார்வையாளர்கள் மத்தியில் நடந்த பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள்

20-11-2025 | 22:43


மெரினாவில் நீலக்கொடி கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பாதையில் சர்வ சாதாரணமாக உலா வரும் பொதுமக்கள்

20-11-2025 | 18:31


சாகர் கவாச் ஒத்திகை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

20-11-2025 | 18:31


சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தூய்மை பணியாளர்கள், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20-11-2025 | 18:30