உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

டிட்வா புயலால் பெய்த மழைநீர் வெளியேறாமல் வீடுகளை சுற்றி தேங்கியிருப்பதால், மக்கள் படகில் செல்லும் நிலை உள்ளது. இடம்: தங்கச்சிமடம் ராஜா நகர், ராமநாதபுரம் மாவட்டம்.

02-12-2025 | 07:57


மேலும் இன்றைய போட்டோ

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, சிவச்சாரியார்களால் ராஜகோபுர கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீர்.

02-12-2025 | 07:51


கார்த்திகை தீப திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. அதற்கு தேவையான மண் விளக்குகளை விற்பனை செய்த பெண். இடம்: கவுண்டம்பாளையம், கோவை.

02-12-2025 | 06:23


தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தில், கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ஆற்றுப்பாலம் இரண்டாக உடைந்தது. ஆற்றை கடக்க முடியாமல் சேதம் அடைந்த பாலத்தில் தவித்த மக்கள்.

01-12-2025 | 08:41


கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கப்பன் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதை காண பூங்காவில் குவிந்தவர்கள்.

01-12-2025 | 08:37


ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகரில் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், அங்கு நேற்று மைனஸ் 4.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் சுற்றுலா பயணியரின் வருகை குறைந்ததால், உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. ஏரியின் கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்ட படகுகள். இதனால் படகோட்டிகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.

01-12-2025 | 08:30


டிட்வா புயலால் கடற்கரையில் வீசிய பலத்த காற்றால், மெரினா, பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள மணல். இதில் வாகனங்களில் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

01-12-2025 | 08:25


சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த வல்லக்கோடடை முருகன். இடம்: காஞ்சிபுரம்.

01-12-2025 | 06:56


செங்கல்பட்டு மாமல்லபுரம் பேரிடர் கால சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இருளர்களுக்கு நகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

01-12-2025 | 06:39


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. உண்ணாமுலை அம்மனும்-அண்ணாமலையாரும் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

01-12-2025 | 06:29