இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கத்தில் உள்ள பழமையான கரியபிரான் கோவில் சுவற்றில் பொருத்தப்பட்ட நிரந்தர அளவுகோலின் குறியீடு.
25-12-2025 | 10:46
கிழக்கு ஐரோபப்பிய நாடான உக்ரைனின் எல்விவ் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு ஊர்வலத்தில், உற்சாகத்துடன் பங்கேற்ற குழந்தைகள்.
25-12-2025 | 10:40
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் இப்போதே களைகட்ட துவங்கி விட்டது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்முவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வலியுறுத்தியும் அணிவகுத்த பள்ளி மாணவர்கள்.
25-12-2025 | 10:15
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உலகப்புகழ் பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிஷாவின் புரி கடற்கரையில் சாண்டா கிளாசின் பிரமாண்ட மணல் சிற்பத்தை, மணலுடன் இயற்கை வண்ணங்களையும், மலர்களையும் பயன்படுத்தி அமைத்துள்ளார்.
25-12-2025 | 10:08
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் பயணியரால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று நிரம்பி வழிந்தது. கோவை செல்லும் 'இன்டர் சிட்டி' ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் பிடிக்க அலைமோதிய கூட்டம்.
25-12-2025 | 07:44