உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விடுமுறைக்காலம் என்பதால், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

28-12-2025 | 09:33


மேலும் இன்றைய போட்டோ

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் அறுவடைக்கு பிந்தைய காலத்தில் நடத்தப்படும் பாரம்பரிய வீர விளையாட்டு கம்பாலா. சேறும், சகதியுமான பந்தய களத்தில் நடத்தப்படும் இந்த போட்டியில் வீரர்கள், எருதுகளுடன் அவற்றுக்கு இணையான வேகத்திற்கு ஓடி இலக்கை அடைவர். பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நிகழ்வு, மங்களூரு அருகே நடந்தது.

28-12-2025 | 09:14


ராணிப்பேட்டை மாவட்டத்தின் வரலாறு சின்னமாகவும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் மகேந்திரவாடி ஏரி தற்போது கடல் போல காட்சி அளிப்பதோடு அதன் உபரி நீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த உபரிநீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.

28-12-2025 | 09:08


திருப்பூரில், திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை,கலா விருஷா நிருத்ய கான சபா சார்பில் மார்கழி நிருத்ய கான உற்சவம் வீரராகவ பெருமாள் கோவிலில் கம்பராமாயணம் வரலாற்று நாட்டிய நடன நிகழ்ச்சி நடந்தது.

28-12-2025 | 06:48


ணி நிரந்தரஆணையை பெற்ற மகிழ்ச்சியில் ஒப்பந்த செவிலியர்கள்.இடம்: டி.எம்.எஸ்.வளாகம், சென்னை.

27-12-2025 | 12:58


சென்னையில் தமிழ்நாடு நகர்ப்புற தூய்மை துணை சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இடம்: சுவாமி சிவானந்தா சாலை.

27-12-2025 | 12:58


நாமக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு முட்டை லோடு ஏற்றி சென்ற மினி லாரி, விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 60 ஆயிரம் முட்டைகள் உடைந்து வீணாகின.

27-12-2025 | 09:24


ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய சுனாமி பெரும் துயரம் நடந்து 21 ஆண்டுகளாகிறது. சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் கூடிய பொதுமக்கள் கடலில் பால் ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

27-12-2025 | 09:20


வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்த நிலையில், சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில், குளித்து மகிழ்ந்தனர்.

27-12-2025 | 08:41


ஊட்டி அருகே சூட்டிங்மட்டம் காட்சி முனைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

27-12-2025 | 08:36