இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள சிவ விஷ்ணு கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜலநாராயணர்.
31-12-2025 | 11:56
இந்திய கடற்படை அதிகாரி கார்த்திகேயனின் மகளான காம்யா அண்டார்டிகாவின் தென்துருவத்தில் ஸ்கையிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு உலக சாதனை படைத்திருக்கிறார். சர்வதேச அளவில் இச்சாதனையை படைத்த இரண்டாவது இளம் பெண் இவர்.
31-12-2025 | 11:45
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே உள்ள உலக புகழ்பெற்ற ஆம்பர் கோட்டையில், தொடர் விடுமுறை காரணமாக அமைமோதிய சுற்றுலா பயணியர்.
31-12-2025 | 10:39
ஹைதராபாத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி கோலாட்ட ஊர்வலத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் பங்கேற்று மற்றவர்களுடன் சேர்ந்து ஆடினார். இந்த புனித நாளில், பாரம்பரிய உடைகளில் இருந்த ஹிந்துப் பெண்களுடன் புர்கா அணிந்த முஸ்லிம் பெண் ஆடியது சமூக ஒற்றுமையையும், கலாசாரப் பரிமாற்றத்தையும் பறைசாற்றுவதாக இருந்தது.
31-12-2025 | 10:07
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. 'ரெங்கா… ரெங்கா...' கோஷம் விண்ணைப் பிளக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, வேத விற்பன்னர்களின் மந்திர முழக்கங்களுடன் நம் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
31-12-2025 | 10:02
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
31-12-2025 | 00:01
வைகுண்ட ஏகாதசி ஒட்டி, குறிஞ்சிப்பாடி அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மூலவர் வைகுண்டவாசன் அலங்காரத்தில், கண்ணாடி அறையில் காட்சி தந்தார்.
30-12-2025 | 11:27