இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் இருந்து, திருநெல்வேலி கால்வாய் பிரிந்து செல்கிறது. இங்குள்ள அணையின் பக்கவாட்டு சுவரில் ஏற்பட்டுள்ள உடைப்பால் வீணாக வெளியேறிய தண்ணீர்.
01-01-2026 | 07:46
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று, ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவியை தரிசிக்க நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை துணை ராணுவப்படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து சோதனையிட்டனர். இடம்: கத்ரா, ஜம்மு.
01-01-2026 | 07:42
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சந்தன்வாரியில், பனிப்பொழிவுக்கு பின், வெண்பனி போர்வை போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளிக்கும் மலைகள்.
01-01-2026 | 07:37
உலகிலேயே மிக பிரமாண்டமாக ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'ஹார்பர் பிரிட்ஜ்' பகுதி வண்ணமயமான வாண வேடிக்கைகளால் பிரமிப்பை ஏற்படுத்தியது.
01-01-2026 | 07:32
சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர் தங்கம் முகங்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து, 2026 புத்தாண்டை வரவேற்றனர்.
01-01-2026 | 07:12
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகம் அருகே ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
01-01-2026 | 05:51