இன்றைய போட்டோ
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிறப்புமிக்க ஆம்பர் கோட்டையில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது சுற்றுலாப் பயணியர் சவாரி செய்து புத்தாண்டைக் கொண்டாடினர். யானைகளின் நெற்றியில் வண்ணமயமான ஓவியங்கள் தீட்டப்பட்டு, ராஜஸ்தானி பாரம்பரியத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அவர்களை பெரிதும் கவர்ந்தது.
02-01-2026 | 08:05
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி அருகே தொரையட்டி பகுதியில் உள்ள காய்கறி தோட்டத்தில் சொட்டு நீர் பாசன முறையில் ஸ்பிரிங்ளர் வாயிலாக நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
23-01-2026 | 08:47
குடியரசு தின விழாவை ஒட்டி, டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் முக அடையாளத்தை கண்டறியும் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
23-01-2026 | 08:43
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
23-01-2026 | 07:46
மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையில் நம் ராணுவத்தின் ரஞ்சித் என்று அழைக்கப்படும் அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் ஏ.டி.வி., வாகனம் பங்கேற்றது. மணல், சேறு, சதுப்பு நிலம் மற்றும் கரடுமுரடான மலைப்பாதைகள் என கடினமான பாதையிலும் இந்த வாகனம் தடையின்றி இயங்கும்.
23-01-2026 | 07:11
புதுடில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, முக அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டஏஐ எனப்படும், செயற்கை நுண்ணறிவு முறையில் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடியின் பயன்பாடு குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர். கூட்ட நெரிசலிலும் சந்தேகத்திற்குரிய நபர்களை இந்த நவீன கண்ணாடி நொடிப்பொழுதில்அடையாளம் கண்டு எச்சரிக்கும் திறன் கொண்டது.
22-01-2026 | 22:28
போர்க்களம் அல்ல வெறும் போராட்டம் தான் எதற்கு மூன்று துப்பாக்கி அஞ்ச மாட்டான் இந்த தொண்டன்.இடம் புதுச்சேரி.
22-01-2026 | 22:17