இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் காக்கிளியர் இம்ப்ளான்ட் எனும் உள் காது கேட்கும் கருவி திட்டத்தின் 25 ஆண்டு விழா நேற்று சென்னையில் நடந்தது நிகழ்ச்சியில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. ரவி ராமலிங்கம் விருதுகளை வழங்கினார் உடன் இடமிருந்து விருது பெற்ற திலகவதி, நிறுவனர் பேராசிரியர் ராமலிங்கம், அட்வான்ஸ் பயனிக்ஸ் தலைமை மருத்துவர் வினோத் நாடிக், விருது பெற்ற அம்சபிரியா, முகமது இலியாஸ்.இடம்.ஹோட்டல் ரேடிசன்ப்ளூ எழும்பூர்.
21-11-2026 | 22:35
செய்தி உண்டு படம் யுவராஜ் சென்னை அண்ணா சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் தேனாம்பேட்டை சைதாப்பேட்டை இடையில் பாலம் பணி. இடம். நந்தனம்
21-11-2026 | 22:30
புதுச்சேரியில் இருந்து நேற்று இரவு விழுப்புரம் நோக்கி சென்ற பேசஞ்சர் ரயில் ரெட்டியார்பாளையம் ஜே ஜே நகர் பகுதியில் மாடு மீது மோதியதில் ரயில் என்ஜின் பகுதி சேதமடைந்து.
21-11-2026 | 22:30
‘பேனாக்கள் பேரவை’ சார்பில், கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்த, ஏழை, எளியோருக்கு 6.50 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா எழுதிய, ‘எம்.ஜி.ஆர்., – கலைஞர் அரசியல் சடுகுடு’ நுால் வெளியிடப்பட்டது. இதில், நிற்போரில் இடமிருந்து: எழுத்தாளர்கள் மடிப்பாக்கம் வெங்கட், ராஜ்குமார், தயாளன், இந்து நடராஜன். மேலே அமர்ந்திருப்போரில், ‘மக்கள் குரல்’ ராம்ஜி, கல்வியாளர் முத்துகுமாரசாமி, நீதியரசர் பாட்ஷா, இயக்குநர் குகநாதன், சாய்சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் பஞ்சாபகேசன், பாடகர் வெங்கடேஷ், வங்கி அலுவலர் சம்பத். கீழே அமர்ந்திருப்போரில் எழுத்தாளர்கள் சித்திரை சிங்கர், ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா, பேனாக்கள் பேரவை நிறுவனர் மோகன்தாஸ், எழுத்தாளர் பூவேந்தன்.
21-11-2026 | 21:01
கோவை சிவானந்தகாலனியில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசிய ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ.
21-11-2026 | 21:00
நெல்லை நாடார் மேல்நிலைப் பள்ளியின், 42ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார்
21-11-2026 | 20:34