உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரகளை செய்ததாகவும், போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாகவும் போலீஸ் உதவி கமிஷனர் மனஸ்வி வசிஷ்ட் கொடுத்த புகார்படி, 20 வழக்கறிஞர்கள் மீது ஷாஹ்தாரா போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசின் இந்த செயலைக் கண்டித்து டில்லியில் நேற்று முன் தினம் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வழக்கறிஞர்களிடன் அத்துமீறிய உதவி கமிஷனர் மனஸ்வி வசிஷ்டா, ஷாஹ்தாரா இன்ஸ்பெக்டர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, டில்லி வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று அறிவித்தது. புதுடில்லி வழக்கறிஞர்கள் சங்க செயலர் தருண் ராணா தலைமையில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நேற்று கூடி நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

28-10-2026 | 17:54


மேலும் இன்றைய போட்டோ

மதுரை மாட்டுத்தாவணி சிவா டெக்ஸ்டைல்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் துணிகளை தேர்வு செய்த வாடிக்கையாளர்கள்.

29-10-2026 | 23:09


காட்பாடியில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நந்தகுமார், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை/ படங்கள்

29-10-2026 | 23:05


‘அர்னாப்’ புயல் காரணமாக ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் முறிந்து விழுந்த மரங்களை மீட்புப் படையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

29-10-2026 | 22:51


மதுரை அழகர்கோவில் ரோடு சூர்யா நகர் பகுதியில் மினி வேனில் பாதுகாப்பின்றி எடுத்துவரப்பட்ட இரும்பு பைப்கள் தவறி ரோட்டில் விழுந்தன. நல்லவேளையாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.

29-10-2026 | 22:50


மதுரை முடக்குச்சாலை இந்திராணி நகர் மெயின் ரோட்டில் கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

29-10-2026 | 22:49


கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகம் முன்புறமுள்ள ஜெட்டி பாலம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.

29-10-2026 | 22:46


திருவண்ணாமலைக்கு , ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது.அப்படி வருபவர்கள் பதினாறு கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், தங்களது மழலைச் செல்வங்களையும் சிறு வண்டிகளில் அமர வைத்துக் கொண்டு வலம் வருவது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பக்தியைக் காட்டுகிறது.

29-10-2026 | 22:45


சென்னை மாநகராட்சி பூங்கா சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.இடம்: ஜீவரத்தினம் நகர், ராயபுரம்.

29-10-2026 | 22:43


திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக கொண்டாடப்படும் பண்டிகையே ‘கர்வா செளத்’ ஆகும்.வட மாநிலங்களில் பிரபலமான இந்த பண்டிகையை கொண்டாடிய பெண்கள் மெகந்தியிட்ட தங்கள் கைகளை காட்டி மகிழ்ந்தனர். இடம்:டோராடூன்,உத்தரசகண்ட்

29-10-2026 | 22:43