உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கையில் குழந்தைகள் தின பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

13-11-2026 | 21:22


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் அடுத்த திருவெண்ணைநல்லூர் பகுதியில் சிலிண்டர் வெடித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

13-11-2026 | 21:25


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கல்வி கடன் முகாமினை மாவட்ட கலெக்டர் பத்மஜா துவங்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு காசோலையினை வழங்கினார்.

13-11-2026 | 21:25


புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த மூன்று தீயணைப்பு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

13-11-2026 | 21:24


திருவள்ளூர் ஜே என் என் சாலையில் இயங்கும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெளியே போலீசார் பிடிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

13-11-2026 | 21:21


கோவை ஈவெரா நூலகத்தில் ஆங்கில பிரிவு பகுதியிலிருந்து புத்தகங்கள் அகற்றப்பட்டன.

13-11-2026 | 21:20


திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் பெரிய குவியல்களாக திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன.

13-11-2026 | 21:20


ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கோவை கோதண்ட ராமர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது.

13-11-2026 | 21:19


கோவை வடகோவை ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட யூரியா உர மூட்டைகள்.

13-11-2026 | 21:18


கந்த சஷ்டி நான்காம் நாள் திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி சிவப்பு நிற பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

13-11-2026 | 21:17