உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கல்வி கடன் முகாமினை மாவட்ட கலெக்டர் பத்மஜா துவங்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு காசோலையினை வழங்கினார்.

13-11-2026 | 21:25


மேலும் இன்றைய போட்டோ

குழந்தைகள் தினத்திற்காக கேக் மற்றும் வாழ்த்து அட்டை பெற்ற உற்சாகத்தில் பள்ளிக் குழந்தைகள். இடம்: கோவை சுந்தராபுரம், சாரதா வித்யாலயா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி.

13-11-2026 | 21:27


குளிர் மற்றும் பனிப்பொழிவு தொடர்ந்து விருத்தாசலம் பகுதியில் வெளி மாநில போர்வை விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

13-11-2026 | 21:26


சென்னை மெரினா நீச்சல் குளம் அருகில் புதியதாக நிழற்குடை உடன் சிறுவர்கள் விளையாடும் தடம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் இடமும் தயாராகி வருகிறது.

13-11-2026 | 21:26


விழுப்புரம் அடுத்த திருவெண்ணைநல்லூர் பகுதியில் சிலிண்டர் வெடித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

13-11-2026 | 21:25


புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த மூன்று தீயணைப்பு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

13-11-2026 | 21:24


சிவகங்கையில் குழந்தைகள் தின பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

13-11-2026 | 21:22


திருவள்ளூர் ஜே என் என் சாலையில் இயங்கும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெளியே போலீசார் பிடிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

13-11-2026 | 21:21


கோவை ஈவெரா நூலகத்தில் ஆங்கில பிரிவு பகுதியிலிருந்து புத்தகங்கள் அகற்றப்பட்டன.

13-11-2026 | 21:20


திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் பெரிய குவியல்களாக திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன.

13-11-2026 | 21:20