உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளித்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

14-11-2026 | 14:35


மேலும் இன்றைய போட்டோ

ரயிலில் வந்த உரமூட்டைகள் லாரிகளில் ஏற்றி குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இடம்: வடகோவை ரயில் நிலையம்.

14-11-2026 | 14:34


கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி சபரிமலைக்கு மாலை அணிவிக்கும் ஐயப்ப பக்தர்களுக்காக சென்னை மயிலாப்பூர் பகுதியில் விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ள மாலைகள்.

14-11-2026 | 14:33


விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை குறை கேட்பு முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தாசில்தார் ரமேஷ் பெற்றுக் கொண்டார்.

14-11-2026 | 14:33


அண்ணாச்சி பழ இலையில் இருந்து நூல் தயாரிக்கும் முறையை கண்டுபிடிக்கும் ரசாயன கலவையுடன் கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி மாணவர்கள் முத்துராஜ் மற்றும் ஹரிஷ்.

14-11-2026 | 14:33


பருவ மழை பெய்ததன் காரணமாக காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கருட தீர்த்த தெப்பக்குளம் நிறைந்து வழிந்தது.

14-11-2026 | 14:33


திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு நீலக் கலர் பூ அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்ரமணியர்.

14-11-2026 | 14:32


கார்த்திகை தீபத்தை யொட்டி, அகல் விளக்குகள் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இடம்: விருத்தாசலம்

14-11-2026 | 14:32


திருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமாள் கோவிலில், கந்த சஷ்டி கவசம் விழாவை தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தயராக உள்ள அரக்கர்கள்.

14-11-2026 | 14:31


கார்த்திகை தீபத்தையொட்டி விருத்தாசலம் தொழில்பேட்டையில் அகல்விளக்குகள் தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது.

14-11-2026 | 14:31