இன்றைய போட்டோ
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமானது, 11 நாட்களுக்கு எரியும்; மேலும், 30 கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். 6 அடி உயரமுள்ள செப்புக் கொப்பரையே மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தீபக் கொப்பரை தற்போது சீரமைக்கப்பட்டு, வழிபாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது.
18-11-2026 | 17:50
மேலும் இன்றைய போட்டோ
ஆந்திரப் பிரதேசத்தில் ‘அக்வான்’ புயல் கரையை நெருங்கி வருவதையொட்டி, விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் கடலோரப் பகுதிக்குச் செல்லாமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
18-11-2026 | 17:52
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. உள்படம்: அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.
18-11-2026 | 17:51
நன்மங்கலம் ஏரி பகுதியில் உள்ள மரக்கம்புகளின் மீது வரிசையாக அமர்ந்து ஓய்வெடுக்கும் நீர் காகங்கள் மற்றும் உணவை தேடி சுற்றி திரியும் கூழைக்கடா கொக்குகள்
18-11-2026 | 17:38
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பகுதியில் இரை தேடி கூட்டமாக வட்டமிடும் மஞ்சள் மூக்கு நாரைகள் கூட்டம்.இடம் : பள்ளிக்கரணை
18-11-2026 | 17:37
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அக்வான் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.
18-11-2026 | 17:37
திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தில் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு செட்டுகள் அமைக்காததால் ஏலம் எடுத்தவர்கள் முன்வரவில்லை. வாகனங்கள் மழை வெயிலில் நிற்கும் அவல நிலை
18-11-2026 | 17:36