உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள் பல நாட்களாக அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

23-11-2026 | 21:16


மேலும் இன்றைய போட்டோ

சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

23-11-2026 | 21:15


சென்னை திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக தாமதமாக இயங்கியதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

23-11-2026 | 21:15


திருப்பூர், பி.என் ரோடு, நெசவாளர் காலனி பஸ் ஸ்டாப் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீனாகுகின்றது.

23-11-2026 | 21:14


கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உடுமலை முத்தையா பிள்ளை லேவுட் அகிலாண்டேஸ்வரி சமேத சோளீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்குகள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

23-11-2026 | 21:13


சென்னை தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

23-11-2026 | 21:13


விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

23-11-2026 | 21:12


மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊழியர்கள். இடம்: கோவை மாநகராட்சி அலுவலக வளாகம்.

23-11-2026 | 21:12


விழுப்புரத்தில் பரவலாக மழை பெய்தது.

23-11-2026 | 21:11


திருப்பூர், பூ மார்க்கெட் வீதியில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

23-11-2026 | 21:11