வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சூப்பர்
அதென்னபா மீன் வியாபாரி மகள் அவங்களாம் படிக்கக்கூடாதா
- நமது நிருபர் - மைசூரு ரூரல் ராமனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் மகாதேவ் - சந்திரகலா தம்பதியின் மகள் சவுந்தர்யா, 26. கர்நாடக உயர் நீதிமன்றம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில் 15வது இடம் பிடித்து வெற்றி பெற்று உள்ளார். சவுந்தர்யா கூறியதாவது: முதல் முயற்சியிலேயே சிவில் நீதிபதியாக தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு எனது பெற்றோர் தான் காரணம். அப்பா மகாதேவ் மீன் வியாபாரம் செய்கிறார். அம்மா சந்திரகலா வீட்டு வேலை செய்கிறார். எனக்கு 2 சகோதரியர் உள்ளனர். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். கஷ்டப்பட்டு என்னையும், சகோதரியரையும் பெற்றோர் படிக்க வைத்தனர். படிப்பு தான் என்னை நீதிபதி ஆக்கி உள்ளது. பி.காம்., படித்து முடித்த பின், சட்ட கல்லுாரியில் சேர்ந்தேன். கல்லுாரிகளுக்கு வரும் நீதிபதிகளை பார்த்து ஊக்கம் அடைந்தேன். மைசூரு நீதிமன்றத்தில் பணியாற்றும் சில வக்கீல்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளேன். தேர்வுக்கு நான் தயாரான போது, அவர்கள் எனக்கு சில டிப்ஸ்கள் கொடுத்தனர். தேர்வின் 3வது நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் என்னை நேர்காணல் செய்தனர். முடிவில் 15வது இடம் பெற்று சிவில் நீதிபதி ஆனது மகிழ்ச்சி. வாழ்க்கையில் எவ்வளவு சிரமம் வந்தாலும், அதை கடக்க கல்வி தேவை. எதிர்மறையாக சிந்திப்பதை நிறுத்தி விட்டு, நம்மால் முடியும் என்று நேர்மையாக நினைத்தால் வெற்றி சாத்தியம். இவ்வாறு அவர் கூறினார். சவுந்தர்யாவின் தாய் சந்திரகலா கூறியதாவது: சிறுவயதில் அதிகம் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், குடும்ப சூழ்நிலையால் படிக்க முடியவில்லை. இதனால் எனது மூன்று மகள்களையும் கஷ்டப்பட்டு நானும், எனது கணவரும் படிக்க வைத்தோம். படித்தால் தான் சொந்த காலில் நிற்க முடியும் என்று, மூன்று மகள்களிடம் சொல்லி வளர்த்தோம். சவுந்தர்யா நீதிபதி ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற இரண்டு மகள்களும் நல்ல நிலைக்கு வருவர் என்று நம்பிக்கை உள்ளது. என் மகள்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கும்படி, உறவினர்கள் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் நாங்கள் எதையும் கண்டுகொள்ளாமல், மகள்களை படிக்க வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
சூப்பர்
அதென்னபா மீன் வியாபாரி மகள் அவங்களாம் படிக்கக்கூடாதா