மேலும் செய்திகள்
கட்சி கொடிகள் தயாரித்து விற்பனை செய்கிறோம்!
14-May-2026
- நமது நிருபர் - கைவினை பொருட்கள் தயாரிப்பது இன்று கிராமப்புற பெண்களை தொழில் முனைவோராக மாற்றி வருகிறது. பட்டு கூடுகளை பயன்படுத்தி கைவினை பொருட்கள் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறார் மாண்டியாவின் மத்துார் தாலுகா தோரபொம்மனஹள்ளி கிராமத்தின் புட்டம்மா, 46. செம்மறியாடுகள் இதுகுறித்து புட்டம்மா கூறியதாவது: என் தந்தை விவசாயி. ஆனாலும், சிறுவயதில் இருந்தே என்னை விவசாய நிலத்தில் இறங்க விட்டது இல்லை. நான் படும் கஷ்டம் என்னுடன் போகட்டும் என்று அடிக்கடி சொல்வார். திருமணத்திற்கு பின், என் கணவருக்கு தொழில் நஷ்டம் அடைந்ததால், 2014ல் என், 34 வயதில் முதல் முறையாக விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். விவசாயம் பற்றி நிறைய தெரிந்து கொள்ள மாண்டியாவில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் தொலை துார கல்வி படித்தேன். விவசாய கண்காட்சிகளில் பங்கேற்றேன். விவசாயத்திற்கு தேவையான நீர் சேமிப்பு முறையை கற்று கொண்ட பின், என் விவசாய நிலத்தில் கரும்பு, நெல், பருவகால பயிர்கள், காய்கறிகளை பயிரிட ஆரம்பித்தேன். செம்மறியாடுகளையும் வளர்த்து தற்போது முழு விவசாய பெண்ணாகவே மாறி விட்டேன். பட்டு வளர்ப்பிலும் ஈடுபடுகிறேன். பட்டு கூடில் இருந்து பட்டு பூச்சிகள் வெளியேறிய பின், எஞ்சியிருக்கும் வெற்று பட்டு கூடுகள் கழிவாக கணக்கிடப்பட்டு துாக்கி எறியப்படுகின்றன. வீணாகும் பட்டு கூடுகளில் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, கைவினை பொருட்கள் தயாரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. இயற்கை சாயம் பட்டு கூடுகள் மீறி, இயற்கை சாயம் பூசி, அழகான மாலைகள், பூங்கொத்துகள், வாழ்த்து அட்டைகள், பொம்மைகள் உள்ளிட்ட கைவினை பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தேன். சுய உதவி குழுக்கள் உதவியுடன் மாண்டியா, மைசூரு மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி கொடுக்கிறேன். க்ஷ என்னிடம் பயிற்சி பெற்ற பல பெண்கள் இன்று கிராமப்புற தொழில் முனைவோராக மாறியுள்ளனர். சுயமாக சம்பாதித்து வருமானம் ஈட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
14-May-2026