உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / பிள்ளைகளை காப்பாற்ற டிரைவரான சுகன்யா ராவ்

பிள்ளைகளை காப்பாற்ற டிரைவரான சுகன்யா ராவ்

தட்சிண கன்னடாவின் மங்களூரு டவுன் பாபு கட்டேயை சேர்ந்தவர் சுகன்யா ராவ், 40. தனியார் பஸ் டிரைவராக வேலை செய்கிறார். பாபு கட்டேயில் இருந்து உல்லால் செல்லும் பஸ்சை ஓட்டி, பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். இதுகுறித்து சுகன்யா கூறியதாவது: எனது கணவர் சொந்தமாக பஸ், லாரி வைத்திருந்தார். நேரம் கிடைக்கும் போது அவரிடம் பஸ், லாரி ஓட்ட கற்று கொண்டேன். ஓட்டுநர் உரிமமும் வாங்கினேன். டிரைவர் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால், பஸ்சை ஓட்டி சென்று இருக்கிறேன். கடந்த 2019ல் மலேரியாவால் கணவர் இறந்த பின், பஸ், லாரியை விற்று விட்டோம். எனக்கு இரட்டை பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதால், இன்னொரு தனியார் நிறுவனத்தில் பஸ் ஓட்ட ஆரம்பித்தேன். காலை 7:00 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவில் தான் வர முடியும். பிள்ளைகள் கல்லுாரிக்கு சென்றதும், முழு நேரம் பஸ் ஓட்டுவதில் இருந்து விடுபட்டு தற்போது பகுதி நேரமாக ஓட்டுகிறேன். ஒரு மாலில் பகுதிநேர வேலையும் செய்கிறேன். திருவிழா காலங்களில் உடுப்பி, குத்ரோலி கோவில்களுக்கு மங்களூரில் இருந்து பயணியரை அழைத்து செல்கிறேன். பெண்கள் எப்போதும் சுய தொழில் கற்று கொள்வது மிகவும் நல்லது. வாகனம் ஓட்ட கற்று கொண்டது, கணவர் இல்லாத போது எனக்கு கைகொடுக்கிறது. டிரைவிங் தொழிலை அதிகம் நேசிக்கிறேன். நான் பஸ் ஓட்டும் போது பஸ்சில் வருவோர், என்னை பாராட்டுகின்றனர். இதனை நான் பெருமையாக எடுத்து கொள்வது இல்லை. பிள்ளைகளை காப்பாற்றும் தொழிலாகவே நினைத்து செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை