உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / கிராமத்தில் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பெண்கள்

கிராமத்தில் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பெண்கள்

மைசூரின் ஹுன்சூர் தாலுகா ஹரிக்யாதனஹள்ளியை கிராமத்தை சேர்ந்தவர்கள் புஷ்பாஞ்சலி, சகுந்தலா, மீனாட்சி. மூன்று பேரும், கிராமத்தில் சேரும் குப்பை கழிவுகளை சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து புஷ்பாஞ்சலி கூறியதாவது: குப்பை கழிவுகளை முதலில் சேகரிக்கும் பணியை செய்த போது, குடும்பத்திற்குள் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் தோழிகள் சகுந்தலா, மீனாட்சி உதவியுடன் குப்பை அள்ளும் பணியை மேற்கொண்டேன். ஹரிக்யாதனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஷிரேனஹள்ளி, நஞ்சாபுரா, மரூர், கெரகலகொப்பலு கிராமங்களுக்கு தினமும் சரக்கு வாகனத்தில் சென்று குப்பைகளை அள்ளி வருகிறோம். எந்த வேலையாக இருந்தாலும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதே, எங்கள் மூன்று பேரின் கொள்கையும். வேலையில் அர்ப்பணிப்பும், நம்பிக்கையும் இருந்தால் வெற்றி அடைய முடியும். முதலில் எங்களை கேலி, கிண்டல் செய்த கிராம மக்கள் இப்போது எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கின்றனர். முன்பு கிராமத்தில் உள்ள ஏரி கரையோரம் மக்கள் குப்பைகளை கொட்டினர். சிலர் குப்பைகளுக்கு தீ வைத்ததால், ஏரி பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கும். இப்போது அந்த பிரச்னை எதுவும் இல்லை. வீடுகளில் எடுக்கும் குப்பைகளை, கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு உட்பட்ட இடத்திற்கு எடுத்து சென்று, தரம் பிரிக்கிறோம். இன்றைய உலகில் பெண்கள் அனைத்து இடங்களிலும் சாதிக்க தயாராக இருக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ