மேலும் செய்திகள்
புரவன்கரா பொன் விழா பாகலுாரில் '10-கே' ஓட்டம்
01-Apr-2026
- நமது நிருபர் - பெங்களூரில் வரும், 26ம் தேதி நடைபெற உள்ள, 'டி.சி.எஸ்.வேல்ர்ட் 10கே' ஓட்டப்பந்தய போட்டியின் துாதராக, பால்கன்ஸ் நாட்டின் ஓட்டப்பந்தய வீராங்கனை பிளாங்கா விளாசிக் நியமிக்கப்பட்டு உள்ளார். உலக தடகள அமைப்பால், கோல்டு லேபிள் ரேஸ் என்று அங்கீரிக்கப்பட்டு உள்ள, 'டி.சி.எஸ்.வேல்ர்ட் 10கே' ஓட்டப்பந்தய போட்டி, வரும், 26ம் தேதி பெங்களூரில் நடக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும், தேசிய, சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீரர், வீராங்கனையரும் பங்கேற்க உள்ளனர். இப்போட்டி குறித்து பல்வேறு நாடுகளுக்கு தகவல் பரப்புவதற்காக, பால்கன்ஸ் நாட்டின் ஓட்டப்பந்தய வீராங்கனை பிளாங்கா விளாசிக் துாதராக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த, 2008ல் பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளியும், 2016ல் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும் வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. துாதராக நியமிக்கப்பட்டதால், பிளாங்கா விளாசிக் மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், ''டி.சி.எஸ்.வேர்ல்ட் 10கே ஓட்டப்பந்தய போட்டியில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஓட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு, உண்மையிலேயே ஊக்கமளிக்கும், சக்தி வாய்ந்தது. ஓட்டம் நம்மை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டுமின்றி, மனரீதியாகவும் வலிமையாக வைத்திருக்கும்,'' என, தெரிவித்துள்ளார்.
01-Apr-2026