மேலும் செய்திகள்
தர்மஸ்தலாவில் பா.ஜ., - எம்.எல்.ஏ., சத்தியம்
01-Jul-2026
- நமது நிருபர் - சர்ஜாபூரில் நடந்த, மாநில அளவிலான கபடி போட்டியில், தர்மஸ்தலா மஞ்சுநாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு ரூரல் சர்ஜாபூரில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில், சர்ஜாபூர் கபடி போட்டி - 2026, கடந்த, 28ம் தேதி தேதி துவங்கியது. மாநிலம் முழுதும் இருந்து, 38 அணிகள் பங்கேற்றன. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன. தர்மஸ்தலா மஞ்சுநாத் அணியும், பெங்களூரு ரூரல் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நடந்த இறுதிப் போட்டியில், 40 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில், தர்மஸ்தலா மஞ்சுநாத் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அந்த அணிக்கு ரொக்க பரிசாக ஒரு லட்சம் ரூபாய், கோப்பை வழங்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த பெங்களூரு ரூரல் அணிக்கு, 50,000 ரூபாய் ரொக்க பரிசு கிடைத்தது. மூன்றாவது இடம் பிடித்த, கஸ்டம்ஸ் சவுத் அணிக்கு, 30,000 ரூபாய் ரொக்க பரிசு கிடைத்தது. வெற்றி பெற்ற அணியை முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் பிரமுகர் ஹஸ்கர் மத்துாரப்பா, பா.ஜ.,வின் பாபு, சீனிவாஸ், பரமேஸ், நடிகர் டிரான் மஞ்சு உள்ளிட்டோர் பாராட்டினர். கபடி போட்டியை ஒருங்கிணைத்து நடத்திய தனுஷ் கூறுகையில், ''சர்ஜாபூர் கபடி போட்டி வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது பாராம்பரியம். கிராமப்புற மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தும் தளமாக இது உள்ளது. வீரர்கள் உற்சாகம், பார்வையாளர்கள் ஆதரவால், இப்போட்டி வெற்றிகரமாக அமைந்தது,'' என்றார்.
01-Jul-2026