மேலும் செய்திகள்
ஆசிய டேபிள் டென்னிஸ் தமிழக வீரர்கள் வெண்கலம்
01-Jul-2026
- நமது நிருபர் -: அமெரிக்காவின், ஒரிகனில் அடுத்த மாதம், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இந்திய அணியின் சார்பாக, 36 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த அணியில் கர்நாடகாவின் ஹூப்பள்ளியை சேர்ந்த சபீர், 18, இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே. இவர், 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கிறார். இவரது அணியில் முகமது அஷ்பக், பியூஷ் ராஜ், ரஞ்சித் குமார் ஆகியோர் உள்ளனர். இதே அணி தான், கடந்த மே மாதம் ஹாங்காங்கில் நடந்த, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது. சபீர் கூறியதாவது: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்திய அணிக்கு தேர்வாவேன் என்பதை நான் எதிர்பார்த்தேன். எனது முழு திறமையையும் வெளிப்படுத்த காத்திருக்கிறே ன். இவ்வாறு அவர் கூறினார்.
01-Jul-2026