பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியில் நிக்கி பிரசாத்
கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடத்தப்படவுள்ள, மஹாராணி கிரிக்கெட் லீக் போட்டிக்கு, விளையாட்டு வீரர்களை ஏலம் விடும் செயல்பாடு முடிந்துள்ளது. பிரபல விளையாட்டு வீராங்கனை நிக்கி பிரசாத்தை, 'பெங்களூரு பிளாஸ்டர்ஸ்' அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இது குறித்து, கே.எஸ்.சி.ஏ., வெளியிட்ட அறிக்கை: ஆகஸ்ட் 4ம் தேதியன்று, ஆலுாரின் கே.எஸ்.சி.ஏ., மைதானத்தில், மஹாராணி கிரிக்கெட் லீக் போட்டி துவங்கவுள்ளது. இறுதி போட்டி ஆகஸ்ட் 10ல், பெங்களூரின் சின்னச்சாமி விளையாட்டு அரங்கில் நடக்கும். போட்டியில், 'பெங்களூரு பிளாஸ்டர்ஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், மங்களூரு டிராகன்ஸ், மைசூரு வாரியர்ஸ், ஷிவமொக்கா லயன்ஸ்' அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் ஏலம் நடந்து முடிந்துள்ளது. பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி, நிக்கி பிரசாத்தை ஏலத்தில் எடுத்துள்ளது. இவர், 3.70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி, அதிதி ராஜேஷ் - 1.50 லட்சம், கண்டிகுப்பா காஷ்வி - 1.55 லட்சம், சந்தாசி கிருஷ்ணமூர்த்தி - 70,000, புஷ்பா கிரேசுர் - 40,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. மைசூரு வாரியர்ஸ் அணி சுபா சதீஷை, 3.10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. பிரக்ருதியை 1.20 லட்சம் ரூபாய், பூஜா குமாரியை 1.05 லட்சம் ரூபாய், சஹனா பவாரை ஒரு லட்சம் ரூபாய், ருச்சிதா ஹத்வார் 85,000 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தது. ஷிவமொக்கா லயன்ஸ் அணி மிதிலா வினோத்தை, 3 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. லாவண்யா சலனா 1.45 லட்சம்ரூபாய், ரோஷிணி கிரண் 1.30 லட்சம், சவும்யா வர்மா 1.05 லட்சம் ரூபாய், ஸ்ரீநிதி 80,000 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். ஹூப்பள்ளி டைகர்ஸ் அணி, தேஜஸ்வினியை 1.50 லட்சம் ரூபாய், அனுபவி பாவிகா ரெட்டியை 1.10 லட்சம் ரூபாய், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷ்ரேயா சவுஹான், கிருஷிகா ரெட்டியை 1 லட்சம் ரூபாய்க்கும் வாங்கியது. மங்களூரு டிராகன்ஸ் அணி, லியாங்கா ஷெட்டியை 2.25 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. பிரத்யூஷா குமாரை 1.80 லட்சம் ரூபாய்க்கு, இஞ்சராவை 1.55 லட்சம் ரூபாய், கார்னிகா கார்த்திக்கை 1.25 லட்சம் ரூபாய்க்கும், சலோனியை 85,000 ரூபாய்க்கும் வாங்கியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -