உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / சக்கர நாற்காலி டென்னிஸ் சேகர் வீராசாமி சாம்பியன்

சக்கர நாற்காலி டென்னிஸ் சேகர் வீராசாமி சாம்பியன்

கர்நாடக சக்கர நாற்காலி டென்னிஸ் சங்கம், கர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்கம் இணைந்து, பெங்களூரு லான் டென்னிஸ் சங்க மைதானத்தில், இரண்டு நாட்கள் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளை கடந்த 23, 24ம் தேதிகளில் நடத்தியது. இப்போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டியில் கர்நாடகாவின் சேகர் வீராசாமி, தமிழகத்தின் கார்த்திக் கருணாகரனை 6 - 4; 6 - 3; என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். பெண்கள் பிரிவில் கர்நாடகாவின் ஷில்பா, கர்நாடக வீராங்கனை பிரதிமா ராவை 6 - 4; 6 - 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் ஆண்கள் பிரிவில் சேகர் வீராசாமியும், பெண்கள் பிரிவில் ஷில்பாவும் சாம்பியன் பட்டம் வென்றனர். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் சேகர் வீராசாமி, தமிழகத்தின் பாலசந்தர் சுப்பிரமணியன் ஜோடி, தமிழகத்தின் மாரியப்பன் துரை, கார்த்திக் கருணாகரனை 6 - 4; 6 - 1; என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் பிரிவில் ஷில்பா குட்லப்பா, ஷில்பா புட்டராஜ் ஜோடி, பிரதிமா, முபீனா கோல்கர் ஜோடியை 6 - 3; 6 - 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. வெற்றி பெற்ற ஜோடிகளுக்கு கோப்பை, பரிசு வழங்கி, கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி பாராட்டு தெரிவித்தார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி