குழந்தைகளுக்கு பிடித்த பாலக்கீரை தொக்கு
பொதுவாக அனைத்து கீரை வகைகளும் உடலுக்கு ஆரோக்கியம், சத்து தர கூடியது. ஆனால் ஏனோ பெரும்பாலான குழந்தைகள் கீரைகளை விரும்பி சாப்பிடுவது இல்லை. இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. கீரை வகைகளை விரும்பி சாப்பிடாத குழந்தைகளையும், கீரையை விரும்பி சாப்பிட வைக்கிறது பாலக்கீரை தொக்கு. இந்த வகை கீரையில், இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இந்த கீரையை வாரத்தில் இரண்டு தடவை சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும். காரசாரமா பாலக்கீரையை வைத்து தொக்கு செய்யலாம்.இந்த ரெசிப்பியை வைத்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். சூடாக சாதம் தயாரித்து இந்த தொக்கை வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம். செய்முறை:
பாலக்கீரையை பொடி, பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், பூண்டு, நறுக்கிய இரண்டு தக்காளி, மிளகாய் பவுடர் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கொள்ளவும். அரைத்து வைத்த விழுதுடன் மஞ்சள், மிளகாய் பவுடர், மல்லி பவுடர், உப்பு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கி வைத்திருந்த பாலக்கீரையை சேர்த்து, பத்து நிமிடம் நன்றாக வெந்ததும் இறக்கினால் சுவையான தொக்கு தயார் - நமது நிருபர் -.