உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / சுவையான பிரட் பிரைஸ்

சுவையான பிரட் பிரைஸ்

மாலை நேரத்தில் காபி, டீயுடன் நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என, ஆசையாக இருக்கும். எப்போதும் முறுக்கு, வடை, போண்டா, பஜ்ஜி போன்ற வழக்கமான தின்பண்டங்களை சாப்பிட்டு போரடிக்கிறதா. புதிது, புதிதாக சாப்பிட வேண்டும் என, தோன்றுகிறதா. 'பிரட் பிரைஸ்' செய்துசாப்பிடுங்கள்.

செய்முறை:

முதலில் பிரட் ஸ்லைஸ்களை, தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கங்களிலும் பொன்னிறமாக 'டோஸ்ட்' செய்து கொள்ளவும். அவற்றை கியூப் வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். காய்ந்த பின் கடுகு, கறிவேப்பிலை, முந்திரி பருப்பு, சிறிதாக நறுக்கிய வெங்காயம் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். அதன்பின் சிறிதாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் துாள், குடமிளகாய், மிளகாய் துாள், சாம்பார் துாள், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்.இரண்டு, மூன்று நிமிடம் வேகவைத்த பின், டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரஸ் ஸ்லைஸ்களை போட்டு கிளறவும். இதில் மிளகு துாள், நறுக்கிய கொத்துமல்லி தழை, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஊற்றி கலக்கி, மூன்று நிமிடங்கள் மூடி வைத்தால், பிரெட் பிரைஸ் தயார். மாறுபட்ட சுவையுடன் இருக்கும். இதை தயாரிக்க சில நிமிடங்கள் போதும். தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு கொள்ளலாம் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை