பட்டாணி - முட்டை காம்பினேஷனில் டிஷ்!
பட்டாணி சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. பட்டாணியில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் ஆகியவை உள்ளன. நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது.ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது; பார்வையை மேம்படுத்துவது என, பட்டாணியால் பல பலன்கள் உள்ளன.இதுபோல முட்டையிலும் அதிக புரதம் உள்ளது. கண் பிரச்னையை தடுப்பது; நினைவு சக்தி அதிகரிப்பது; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது உட்பட பல பலன்கள் உள்ளன.பட்டாணி - முட்டையில் சூப்பரான காம்பினேஷனில் அருமையான டிஷ் ஒன்று செய்யலாம். தேவையான பொருட்கள்
▶ பட்டாணி 50 கிராம்▶ ஒரு டீஸ்பூன் மிளகாய் பவுடர்▶ இரண்டு பச்சை மிளகாய்▶ கால் டீஸ்பூன் மிளகு பவுடர்▶ மூன்று முட்டை▶ இரண்டு பெரிய வெங்காயம்▶ கொத்தமல்லி சிறிதளவு▶ கால் டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு▶ உப்பு, எண்ணெய் தேவையான அளவு▶ அரை டீஸ்பூன் சீரகம்▶ ஒரு கொத்து கறிவேப்பிலை. செய்முறை
பட்டாணியை எட்டு மணி நேரம் தண்ணீரில் நன்கு ஊற வைக்க வேண்டும். பின், அடுப்பை ஆன் செய்து குக்கரை வைத்து பட்டாணியை போட்டு இரண்டு விசில் விட வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பட்டாணியை சேர்த்து நன்றாக கிளறி மிளகாய் பவுடர், உப்பு சேர்த்து கிளறவும்.பச்சை வாசனை போனதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி இறக்கினால் சுவையான பட்டாணி முட்டை மசாலா தயார். - நமது நிருபர் -