உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / எலும்பு, பற்களுக்கு பலம் சேர்க்கும் அகத்தி பூ பொரியல்

எலும்பு, பற்களுக்கு பலம் சேர்க்கும் அகத்தி பூ பொரியல்

பொதுவாக வீட்டில் சாதம், குழம்பிற்கு தொடு கறியாக உருளை கிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், வெண்டைக்காய், காலிபிளவரில் பொரியல் செய்து இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால் அகத்தி பூ வைத்தும் சூப்பரான பொரியல் செய்யலாம்.அகத்தி கீரையை விட அகத்தி பூ பல மருத்துவ குணம் கொண்டது. கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் பிரச்னைகளை தீர்ப்பதில் அகத்தி பூ முக்கிய பங்கு வகிக்கிறது.புகைப்பிடிப்பவர்கள் உடலில் உள்ள அழுக்கை வெளியேற்றவும், எலும்புகள், பற்களுக்கும் பலம் சேர்க்கவும் உதவுகிறது.கண் பார்வையை நன்றாக தெரிய வைப்பதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. பல நன்மை பயக்கும் அகத்தி பூ பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிகப்பு அகத்தி பூக்களை நன்கு கழுவி வைக்க வேண்டும். பின், பூக்களை பொடியாக நறுக்கவும். அதனுடன் சாம்பார் வெங்காயத்தை தோல் நீக்கி சிறிதாக பொடிசாக நறுக்கி வைத்து கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின், நறுக்கி வைத்திருந்த வெங்காயம், அகத்தி பூக்களை சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் மஞ்சள் பவுடர், மிளகாய் பவுடர் சேர்த்து கலந்து விடவும். உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, ஒரு தட்டை வைத்து ஐந்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். பின், தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்கினால் சிவப்பு அகத்தி பூ பொரியல் தயார்.அகத்தி பூ வெள்ளை நிறத்திலும் கிடைக்கும். ஆனால் வெள்ளை நிறத்தை விட சிவப்பு பூ தான் அதிக சுவை மிகுந்தது. -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை