உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / பால்கோவா கச கசா போளி ரெசிபி

பால்கோவா கச கசா போளி ரெசிபி

தேவையான பொருட்கள்: சர்க்கரை - ஒரு கப் துருவிய தேங்காய் - ஒரு கப் கசகசா - கால் கப் மைதா - ஒரு கப் கோதுமை - ஒரு கப் ரவை - ஒரு கப்சமையல் எண்ணெய் - தேவையான அளவு மஞ்சள் துாள் - ஒரு சிட்டிகை உப்பு - சிறிதளவுபால்கோவா - 50 கிராம் (சர்க்கரை சேர்க்காதது) செய்முறை : முதலில் கசகசாவுடன் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இயல்பாகவே கசகசாவில் எண்ணெய் பதம் இருப்பதால் நாம் அரைக்கும் போதே அது கெட்டியான பதத்திற்கு வரும். மேலும், இதில் தண்ணீர் விடாமல் வெறுமையாக அரைத்துக் கொள்ளவும். தேவையெனில் கசகசாவை வறுத்தோ, ஊறவைத்தோ, அல்லது அப்படியே அரைத்தோ எடுத்துக் கொள்ளலாம். நான்ஸ்டிக் தவாவை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள கசகசா கலவை மற்றும் பால்கோவாவை சேர்த்து சிறிது நேரம் கிளறவும். அவை கையில் உருண்டையாக பிடிக்கும் பதத்தத்திற்கு தயாராகி இருக்கும். நல்ல மனம் தேவையெனில் ஜாதிக்காய் அல்லது ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பில் வைத்து கிளறிய கசகசா பூரணத்தை ஒரு அரைமணி நேரம் ஆறவைக்க வேண்டும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் மைதா, ரவை, கோதுமை, தேவையான அளவு உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பிசையும்போது கெட்டியாக இல்லாமல் சிறிது இலகிய பதத்தில் இருந்தால் தான் போலியில் பூரணம் வைத்து தேய்க்க சரியாக இருக்கும். துாள் மைதா மாவை தனியாக வைத்துக் கொள்ளவும். தோசை கல் அல்லது நான்ஸ்டிக் தவாவை சிம்மில் வைத்து சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். சிறிதளவு மைதா துாள் மாவை எடுத்து சப்பாத்தி தேய்ப்பதில் வைத்து உருண்டையாக போளி மாவை உருட்டி தேய்க்கவும். அதனுள் கசகசா பூரணத்தை வைத்து மூட்டை மாறி முடிந்து மைதா துாள் மாவில் போட்டு மீண்டும் எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல், போளியின் ஓரப் பகுதியை மெல்லியதாக தேய்க்க வேண்டும். மாவு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க மைதா துாள் மாவை அவ்வப்போது சேர்த்துக் கொள்வது நல்லது. பின்னர் தேய்த்து வைத்துள்ள போளியை தவாவில் போட்டு தேவியான அளவு நெய்யோ, எண்ணெயோ விட்டு வேக விடவும். சப்பாத்தி போட்டு திருப்பி எடுப்பது போல் சிறிது நேரம் வேக வைத்து திருப்பவும். இருபுறமும் வெந்தவுடன் திருப்பி போட்டு எடுத்து பரிமாறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி