உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  உடல் ஆரோக்கியத்துக்கு வாழைத்தண்டு துவையல்

 உடல் ஆரோக்கியத்துக்கு வாழைத்தண்டு துவையல்

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வாழைத்தண்டு துவையலை எளிய முறையில் எப்படி செய்வது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். தேவையான பொருட்கள் l வாழைத்தண்டு சிறிய துண்டு l உப்பு தேவையான அளவு l புளி சிறிதளவு l காய்ந்த மிளகாய் - 6 l பச்சை மிளகாய் - 1 l கடலை பருப்பு - 2 டீஸ்பூன் l உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் l கறிவேப்பிலை - ஒரு கொத்து l கடுகு 1 டீஸ்பூன் l பச்சை மிளகாய் - 2 l பெருங்காய துாள் - 1 டீஸ்பூன் l தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன் செய்முறை வாழைத்தண்டை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும், வாழைத்தண்டு துண்டுகள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், புளி சேர்த்து நன்கு வதக்கவும். இதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். இதில், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும். இதையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். பின், வதக்கியவை சூடு ஆறியதும், அனைத்தையும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின், இறுதியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காய துாள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். இதில், மிக்சியில் அரைத்து வைத்த விழுதை போட்டு லேசாக கிண்டவும். இதை அப்படியே வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். அவ்வளவு தான் சுவையான வாழைத்தண்டு துவையல் தயார். இந்த துவையலை சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிடலாம். சுவை அற்புதமாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !