மேலும் செய்திகள்
பட்டாணி - முட்டை காம்பினேஷனில் டிஷ்!
10-May-2025
பாகற்காயை உணவில் எடுத்து கொள்வதன் மூலம் பல நன்மைகள் உள்ளன. ஆனால் கசப்பாக இருப்பதால் பாகற்காயை பெரும்பாலானோர் உணவில் எடுத்து கொள்வது இல்லை. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது; நோய் எதிர்ப்பு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது; செரிமானத்தை மேம்படுத்துவது; ரத்தத்தை சீராக வைப்பது உட்பட பல நன்மைகள் உள்ளன. வீடுகளில் பாகற்காயை நன்கு வதக்கி, 'பிரை' செய்வர். பாகற்காயை வைத்து சூப்பரான கார குழம்பும் செய்யலாம். செய்முறை
தோல் உரித்த 5 சின்ன வெங்காயம், தக்காளி, துருவிய தேங்காய், காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஐந்து தோல் உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, தோல் உரித்த பூண்டையும் போட வேண்டும். பின், நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். நன்றாக வதக்கினால் தான் பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை போகும்.பின் முதலில் அரைத்த விழுதை சேர்த்து, அதனுடன் சாம்பார் பவுடர், புளி கரைசல் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்த பின், அடுப்பை, 'ஆப்' செய்து குழம்பை இறக்கி விடவும் - நமது நிருபர் -.
10-May-2025