உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / ராகியில் பக்கோடா சாப்பிடலாமா?

ராகியில் பக்கோடா சாப்பிடலாமா?

மழைக்காலம் வந்தாலே சூடான டீ அல்லது காபியுடன் என்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்ற எண்ணம் தான் தோன்றும். அந்த மாதிரி நேரங்களுக்கு இந்த ராகி பக்கோடாவை செய்யலாம். மழைக்காலங்களில் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நாவிற்கு சுவையைக் கொடுக்கும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபிகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் ராகி பக்கோடா. செய்முறை  முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் ராகி மாவு -- கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மிளகாய், பெருங்காயத்துாள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்  இதனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பக்கோடா பொறித்து எடுக்கும் பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்  பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்  எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை எண்ணெய் உதிர்த்து விட்டு, பொரித்தால் போதும் சுவையான ராகி பக்கோடா ரெடி - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை