உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ்

1 கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை உள்ளிட்டவற்றை சமையலுக்கு ஊற வைக்க மறந்துவிட்டால், ஒரு நிமிடம் வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து குக்கரில் வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்2 ஸ்வீட்கள் செய்யும்போது, சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டை பொடியாக்கி சேர்த்தால் இனிப்பு அதிகமாக இருக்கும்3 பொரியல் மீந்துவிட்டால், அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊத்தி, முட்டை பொடி மாஸ் செய்து சாப்பிடலாம்4 உருளைக்கிழங்கை மோரில் ஊறவிட்டு, சிப்ஸ் போட்டால், சிப்ஸ் வெள்ளை நிறத்தில் வரும்5 அரிசி குருணை உப்புமா செய்யும்போது கடைசியில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்6சிறிதளவு வேர்க்கடலையை 20 நிமிடங்கள் ஊற வைத்து, நைசாக அரைத்து கிரேவி வகைகளை சமைக்கும்போது சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும்7வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது, சிறிது தயிர் ஊற்றி வதக்கினால், வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி மொறு மொறுப்பாக இருக்கும்8புளி சாதம் செய்யும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்து செய்தால் சுவை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ