குழந்தைகளை கவரும் நண்டு லாலிபாப்!
அசைவ உணவில் நண்டை பிரிக்கவே முடியாது. அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றாக நண்டும் உள்ளது. மீன்கள், இறால்களை விட நண்டுவை விரும்பி சாப்பிடுவர்கள் அதிக பேர் உள்ளனர்.ஆனால் என்ன, நண்டுவை சற்று கவனமாக சாப்பிட வேண்டும். ஆர்வ கோளாறில் வேகமாக சாப்பிட்டால் நண்டின் முள் தொண்டையில் குத்திவிடும்.இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் நண்டை வாங்கி குழம்போ, சூப்போ வைத்து உணவுடன் எடுத்துக் கொண்டால் இருமல், சளி பறந்து போகும்.நண்டில் கனிம சத்துகள் நிறைய உள்ளன. மூளை வளர்ச்சிக்கு உதவுவதுடன், இதயத்தை பாதுகாக்கவும், உடல் எடையை குறைக்கவும், கண்பார்வைக்கும் உதவுகிறது.நண்டில் குழம்பு, சூப் செய்வதை பார்த்து இருப்போம். லாலிபாப் கூட செய்யலாம். தேவையான பொருட்கள்
▶ அரை கிலோ நண்டு▶ நான்கு பிரட் துண்டுகள்▶ ஒரு டீஸ்பூன் மிளகு பவுடர்▶ இரண்டு பெரிய வெங்காயம்▶ உப்பு, எண்ணெய், பிரட் க்ராம்ஸ் தேவையான அளவு▶ இரண்டு டீஸ்பூன் கார்ன் ப்ளவர். செய்முறை
நண்டை நன்கு சுத்தம் செய்து, சதை பகுதியை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் நண்டின் சதை பகுதி, பிரட்டை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகு துாள், அரைத்த நண்டு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதை சிறிய, சிறிய உருண்டைகளாக உருட்டு அதன் நடுவில் நண்டு காலை குத்தி வைத்துக் கொள்ளவும். கார்ன் ப்ளவர் மாவில் தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரில் நண்டு லாலிபாப்பை புரட்டி பிரட் கிராம்ஸ் சேர்த்து மீண்டும் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நண்டு கலவையை போட்டு பொரித்து எடுத்தால், நண்டு லாலிபாப் தயார்.மாலை நேர டீ, காபிக்கு ஸ்நாக்ஸாக இந்த லாலிபாப் சாப்பிடலாம். பொதுவாக குழந்தைகளுக்கு லாலிபாப் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், நண்டில் செய்த லாலிபாப்பை கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவர். - நமது நிருபர் -