மேலும் செய்திகள்
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
16-Nov-2025
l தேங்காய் சட்னியில் கொத்தமல்லி அரைத்து ஊற்றினால் சுவை அதிகமாகும். l குருமா செய்யும்போது தேங்காய் இல்லையெனில் பொட்டுக்கடலை அரைத்து ஊற்றலாம். குருமாவின் சுவை நன்றாகவே இருக்கும். l பொன்னாங்கண்ணி கீரையை நெய் விட்டு வதக்கி மிளகு, உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் தயார். l பாதாம் பால் வீட்டில் செய்யும்போது, அதிக பாலாடையுடன் சேர்த்து குடித்தால் பால் சுவையாக இருக்கும். l மீன் குழம்பு வைத்த பின், உடனே குழம்பை சாப்பாட்டில் ஊற்றி சாப்பிடாமல் நான்கு மணி நேரம் கழித்து சாப்பிட்டால் குழம்பின் சுவை அருமையாக இருக்கும். l கல் உப்பை மிக்சியில் போட்டு அரைத்தால் வீட்டிலேயே துாள் உப்பு செய்ய முடியும். l வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க சமைப்பதற்கு முன்னதாக சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். l அவித்த முட்டையை சிறிய துண்டுகளாக வெட்டி அதில் மிளகு தூள் போட்டு சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். l துவரம் பருப்பை ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்தால், சாம்பார் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்கும். l தோசை, இட்லி தொட்டு சாப்பிட செய்யும் சாம்பாரில் மஞ்சள் பூசணிக்காய் சேர்த்தால் சாம்பார் சுவையாகவும், கெட்டியாகவும் வரும். l உளுந்த வடைக்கு மாவு அரைக்கும்போது, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அரைத்தால் வடையை எண்ணெயில் பொரிக்கும்போது அதிகம் எண்ணெய் தேவைப்படாது. - நமது நிருபர் -:
16-Nov-2025