உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  நொறுக்குகள்

 நொறுக்குகள்

- நமது நிருபர் -: குக்கரில் கருணை கிழங்கை வேகவைத்து, அதை மசால் வடை மாவுடன் சேர்த்து வடை சுட்டால் வித்தியாசமான சுவையில் இருக்கும். மோரில் புரதச்சத்து நிறைந்துள்ளதால், அதை குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க முடியும். துவரம் பருப்பை வேகவைக்கும் போது, ஒரு தேங்காய் துண்டை சேர்த்தால், பருப்பு சீக்கிரம் வெந்து வெண்ணெய் போல குழைவாகும். தக்காளி சாதத்தில் மீல்மேக்கர் சேர்த்து செய்தால் சுவை நன்றாக இருக்கும். கொண்டை கடலையை ஊறவைத்த பின், ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து, பிறகு வேக வைத்தால் கடலை பெரிதாக வரும். கார பணியாரம் சுடும் போது வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி பிறகு மாவோடு சேர்த்து பணியாரம் சுட வேண்டும். வடை மாவில் பொடியாக நறுக்கிய கீரை, முட்டைகோஸ், வாழைப்பூ போன்றவற்றை சேர்த்தால் சுவை கூடும்; உடலுக்கும் நல்லது. கொத்துதமல்லி துவையல் செய்யும் போது, தயிர் சேர்த்து அரைத்தால் சுவை அதிகரிக்கும். தயிரில் தேங்காய் துண்டை போட்டு வைத்தால், விரைவில் புளிக்காது. கல் உப்பை மிக்சியில் போட்டு அரைத்தால் துாள் உப்பு கிடைக்கும். இது போன்று செய்தால் மிக்சியில் உள்ள பிளேடுகள் கூர்மையாகும். அதே சமயம், துாள் உப்பையும் கடைக்கு சென்று வாங்க தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ