மேலும் செய்திகள்
முழங்கால் வலி
06-Jun-2026
World Cup 2026.ல Big Upset இருக்கு!!!
11-Jun-2026
-நமது நிருபர் -: *முறுக்கு மாவு பிசையும் போது நன்றாக பழுத்த ஒரு வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்தால், முறுக்கு சுவையாக இருக்கும் *கத்திரிக்காய் அல்லது வாழைக்காயை நறுக்கியவுடன் சிறிது உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால், அவை விரைவாக கருமையாகாமல் இருக்கும் * கடலை எண்ணெய் பயன்படுத்தி பலகாரம் செய்தால், பலகாரங்கள் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும் * பூரி மாவு பிசையும் போது சிறிதளவு வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து பிசைந்தால், பூரி மென்மையாக இருக்கும் * வாழைக்காயை சமைக்கும் போது மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்து கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படாது * பழுத்த தக்காளிகள் மீது சிறிது உப்பு துாவினால், இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும் * வெந்தய தோசையின் மீது மிளகு, சீரக பொடி துாவி சாப்பிட்டால் தோசையின் சுவை அற்புதமாக இருக்கும் *கருணை கிழங்கை வேக வைக்கும்போது சிறிதளவு வெல்லம் சேர்த்தால் கிழங்கு சீக்கிரம் வெந்து விடும் * மோர் குழம்பு வைக்கும்போது நெல்லிகாய்களை அரைத்து சேர்த்தால் குழம்பின் சுவை கூடும்.
06-Jun-2026
11-Jun-2026