உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  நொறுக்குகள்

 நொறுக்குகள்

- நமது நிருபர் -ரசத்தில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை அரைத்து சேர்த்தால், ரசத்தின் சுவை நன்றாக இருக்கும். l கருவாட்டு குழம்பு செய்யும் போது கடைசியாக நான்கு பல் பூண்டுகளை தட்டி போட்டால், குழம்பின் சுவை கூடும். l மோர் குழம்பு செய்யும் போது தாளிப்புக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், குழம்பின் சுவை அதிகரிக்கும். l ரவை வறுக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்து வறுத்தால், ரவையில் நீண்ட நாட்கள் புழுக்கள் வராமல் இருக்கும். l தோசைக்கு மாவு அரைக்கும் போது அரிசி, உளுந்துடன் சிறிதளவு ஜவ்வரிசியும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், தோசை மொறு மொறுப்பாக இருக்கும். l இட்லிக்கு மாவு அரைக்கும் போது அதனுடன் சிறிது வடித்த சாதம் சேர்த்து அரைத்தால், இட்லி பஞ்சு போல மென்மையாக இருக்கும். l துவரம் பருப்பு வேகவைக்கும் போது சிறிதளவு நெய் சேர்த்து வேகவைத்தால் பருப்பு எளிதில் வெந்துவிடும். l கேரட் சூப் செய்யும் போது, அதில் சிறிதளவு வறுத்த சேமியாவை சேர்த்தால் சூப் சுவையாக இருக்கும். l எந்த வகை சட்னியிலும் சிறிதளவு பூண்டு சேர்த்து அரைப்பது உடல்நலத்திற்கு நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை