மேலும் செய்திகள்
குட்டீஸ்கள் விரும்பும் யம்மி கார்ன் புலாவ்
25-Oct-2025
பொதுவாக அனைத்து வீடுகளிலும், வாரம் ஒரு முறையாவது காலை சிற்றுண்டிக்கோ அல்லது மதிய உணவுக்கோ, காய்கறி புலாவ் தயாரிப்பர். வழக்கமான காய்கறி புலாவுக்கு பதிலாக, காஷ்மீரி புலாவ் செய்து பாருங்கள். சுவை அள்ளும். செய்முறை முதலில் அரிசியை நன்றாக கழுவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பின் நீரை வடித்துவிட்டு, பால் சேர்த்து மூடி வைக்கவும். அடுப்பில் குக்கர் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். காய்ந்ததும் முந்திரிப்பருப்பு அல்லது பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதில் உலர் திராட்சையை சேர்க்கவும். இவற்றை எடுத்து தனியாக தட்டில் வைக்கவும். அதன்பின் அதே குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். நீள வாக்கில் நறுக்கிய வெங்காயதை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளறவும். பொன்னிறமானதும் குக்கரில் இருந்து எடுத்து, தட்டில் வைக்கவும். அதன்பின் குக்கரில் பட்டை, லவங்கம், சீரகம், சோம்பு உட்பட, மேற்கூறிய அனைத்து மசாலா பொருட்களை சேர்த்து வறுக்கவும். இதில் அரிசி, உப்பு, சர்க்கரை விரும்பினால் மேலும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கை விடாமல் கிளறவும். இதில் குங்குமப்பூ, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். குக்கரின் அழுத்தம் குறைந்த பின், மூடியை திறந்து உலர்ந்த திராட்சை, பாதாம், முந்திரிப்பருப்பு, மாதுளை முத்துக்கள், நறுக்கிய ஆப்பிள், அன்னாசி போட்டு கிளறினால், காஷ்மீரி புலாவ் ரெடி. இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பழங்கள் சேர்ப்பதால் அவர்களுக்கு ஊட்டசத்தும் கிடைக்கும். தொட்டுக்கொள்ள ரைத்தா அல்லது தயிர்ப்பச்சடி பொருத்தமாக இருக்கும். - நமது நிருபர் -
25-Oct-2025